தங்கம்


பத்தாயிரம் அடி நிலத்தில் 
பதுங்கி நிற்கும் பொன்மகளே 
நீ 
பாறையில் தூங்கினாலும் 
பாறையை உடைத்தெடுத்து 
பாதரசம் பயன்படுத்தி
பணமகளாக உயிர் பெறுவாய் 
பழுதில்லா நகைகளுக்கு
பத்திரைமாத்து என்பர் 
ஆப்ரிக்கா கண்டத்திலே
அதிகமாக விளைந்தபோதும்
கர்நாடக மாநிலத்திலே
கணிசமாய் கிடைத்தபோதும்
தரம் உயர்த்தித் தருபவர்கள்
தமிழகத்துப் பெண்கள்தானே

ரேவதி பெருமாள்சாமி.

Comments