இயற்கை


வானமும் நீயே! வானத்தின் வனப்பும் நீயே!
வனத்தில் ஒளிரும் நிலவும் நீயே! விண்மீனும் நீயே!
வைகறைப் பொழுதும் நீயே! வானவில்லும் நீயே!
அடர்ந்த காடும் நீயே! அருவியாய் விழுகின்ற அழகும் நீயே!
மலையும் நீயே! மலையை தழுவுகின்ற முகிலும் நீயே!
வண்ண மலர்களின் வாசம் நீயே! வண்டுகளின் ரீங்காரம் நீயே!
நதியும் நீயே! கடலும் நீயே!
காரிரும் நீயே! கார்முகிலும் நீயே!
மண்ணும் நீயே! மழையும் நீயே!
மழையால் வளரும் மரமும் நீயே! மரம் தரும் கனியும் நீயே!
எங்கும் நிறைந்த காற்றும் நீயே! எல்லா உயிர்களின் இயக்கமும் நீயே!
இரவும் நீயே! பகலும் நீயே!
இருளும் நீயே! ஒளியும் நீயே!
இவ்வுயிர்கள் அனைத்தும் நீயே! நீயே!

Popular posts from this blog

HEALTH BENEFITS OF PAVALAMALLI (NYCTANTHES ARBOR-TRISTIS )

HOMEOPATHIC REMEDY FOR MENSTRUAL PROBLEMS

SYZYGUIM JAMBOLANUM ( HOMEOPATHIC MEDICINE )