Posts

Showing posts from May, 2013

வெள்ளரிக்காய் & காரட்

Image
வெள்ளரிக்காய் ,காரட் இவைகளை எடுத்து நன்றாகக்கழுவி மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து சாறு  எடுத்து வடிகட்டி அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அருந்தினால் இந்த ஜூஸ் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் பலவித நோய்களை போக்கவல்லது.வெள்ளரிக்காயில் பொட்டாசியம் ,கால்சியம்,செலினியம்வைட்டமின் -எ ,வைட்டமின் பீகாம்பிளக்ஸ் ,வைட்டமின் சி ,,நார்சத்து ,போன்ற சத்துக்கள்அதிகம்  உள்ளன ,தோல்வறட்சி  இரத்தஅழுத்தம் ,சர்க்கரைவியாதி ,சிறுநீரக வியாதி ,போன்ற நோய்களுக்கு மிகவும் உகந்தது .வெள்ளரிக்காயிலும் காரட்டைப் போலவே தோலுக்கு அருகில் சத்துக்கள் உள்ளதால் தோலை சீவாமல் அப்படியே பயன் படுத்த வேண்டும் .வெள்ளரிக்காயை  தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது .உடல் பளபளப்பு பெரும் .
.

அறுசுவை உணவு

ஆறு சுவைகளான காரம்,புளிப்பு,இனிப்பு,துவர்ப்பு,உவர்ப்பு,கசப்பு அனைத்தும் நம் உடலுக்கு தேவையானது. நாம் அறுசுவை உணவை உட்கொண்டால் நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும்.நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் ஒரு சுவையைக் கொண்டது.

கல்லீரல் மற்றும் கால் பிளாடர் புளிப்பு சுவை கொண்டது. இருதயம் மற்றும் கணையம் கசப்பு சுவை கொண்டது. மண்ணீரல் மற்றும் இரைப்பை இனிப்பு சுவை கொண்டது. நுரையீரல் மற்றும் பெருங்குடல் காரச் சுவை கொண்டது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை உவர்ப்பு சுவை கொண்டது.
இச்சுவைகள் அதிகமாகும் பொழுது அந்தந்த உறுப்புக்களை பாதிக்கிறது. அநேக மக்களுக்கு பிடித்த சுவை காரச் சுவையாகும். இதனை அதிகமாக உட்கொண்டால் அல்சர்,நரம்பு தளர்ச்சி,சிறுநீர் கழிக்கும் பொது எரிச்சல்,உடலில் சிறுசிறு கொப்பளங்கள்,வயிற்றுவலி போன்றவைகள் உண்டாகும்.மிளகாய்,மிளகு,கடுகு போன்றவைகளில் காரச் சுவை அதிகமாக உள்ளது.
ஒரு பொருளை சுத்தம் செய்யகூடிய தன்மை புளிப்பு சுவைக்கு உண்டு. புளிப்பு அமிலத் தன்மை வாய்ந்தது.ரத்தத்தில் உள்ள பித்தத்தை குறைக்கும். புளி,எலுமிச்சை,மாங்காய் ஆகியவற்றில் புளிப்பு சுவை அதிகம் உண்டு.
இனிப்பு…

வானம்போல் உதவுவோம்

முடிவில்லா முயற்சி செய்தால்
முடியாததது எதுவுமில்லை மானிடரே!
உலகிற்கே உதவும் திறன் இருக்க
உற்றார் உதவி உனக்கெதற்கு
கடல் அலை என்றும் ஓய்ந்ததில்லை
காற்றலை கூட சாய்ந்ததில்லை
தோல்வியை ஏற்கும் மனமிருந்தால் ,உனை
வெற்றி நோக்கிப் பயணமிடும்
மனிதநேய மனமிருந்தால்
புனிதம் அதைவிட வேறில்லை
பிறப்பென்று இருக்கும் மாந்தர்க்கு
இறப்பதைத் தடைபோட விதியுமில்லை
இறப்பினும் வாழலாம் மாந்தர்களே
இருப்போர்க்குக் கொடுங்கள் கண்தானம் .

ஆரோக்கிய சமையல் குறிப்பு-வல்லாரை சாலட்

Image
வல்லாரை சாலட் தேவையான பொருட்கள் :வல்லாரைக்கீரை - 1கட்டு
தேங்காய்த்துருவல் -3மேஜைக்கரண்டி       பெரியவெங்காயம் -1      பச்சைமிளகாய் -3      எலுமிச்சம்பழம் -பாதி       மிளகுத்தூள் -கால் தேக்கரண்டி       உப்பு -தேவையான அளவு 
செய்முறை :                 வல்லாரைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து ,கழுவி பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும் .வெங்காயம் ,பச்சைமிளகாய் ஆகியவற்றை நறுக்கி வல்லரைக்கீரையுடன் சேர்த்து ,அதனுடன் தேங்காய்த்துருவல் ,மிளகுத்தூள் ,உப்பு சேர்த்து எலுமிச்சம்பழம் பிழிந்து நன்றாகக் கலக்கவும். இப்பொழுது அருமையான அதிக சத்துக்கள் நிறைந்த வல்லாரை சாலட்  தயார்.
பயன்கள்:ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும்.மூளைக்கும் நரம்புகளுக்கும் வலுவூட்ட கூடியது.  இந்த சாலட்டை வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் ஞாபக சக்தி அதிகரித்து நன்றாக படிப்பார்கள். 


Hypertension (High Blood Pressure)

Image
This is condition in which the pressure in the arteries is elevated. As a consequence, the heart has to work hard to pump the blood.This strains the heart and blood vessels.
The measurement of blood pressure has components namely systolic and diastolic pressure.
Systolic Pressure: Contraction of musclesDiastolic Pressure: Relaxation of musclesThe optimum blood pressure of a normal person is 120/80 mm Hg. 
If the blood pressure ranges from 120/80 mm Hg  to 140/90 mm Hg it is considered prehypertension. If it exceeds this range it is considered as hypertension.
Symptoms Of Hypertenstion:Headaches, pain in back of the head, dizziness, fatigue, hissing sound in the ear, blurred vision, anxiety, nervousness, confusion,nausea.
Causes:Genetical problemObesityBad food habitStressEnvironmental ChangesIntake of high sodium dietSmoking cigarettes and drinking alcohol during pregnancy (gestatational BP)Diabetesside effects of medicinesEffects: High BP is major factor for stroke, myocardial infection (…

HOMEOPATHIC REMEDY FOR BALD HEADEDNESS

Image
Drug                                                :  Jaborandi 30 Dosage                                            :  2-3 pills ; Morning and night (20 mins.) before food  Duration                                           : 15-20 days
This medicine and Jaborandi hair oil are available in homeopathic medicals. Apply this oil on the head and take the tablets for growing hair in bald-head. This medicine is extracted from the plant named Pilocarpus Jaborandi commonly known as Jaborandi. This medicine has no side effects.

ஆவரம்பூவின் மருத்துவ பயன்கள்

Image
ஆவாரம்பூ செடி வறட்சியை தாங்கி வளரக்கூடிய ஒரு செடி இனம் ஆகும்.இது எந்த வகையான நிலமாக இருந்தாலும் குத்துச் செடியாக வளரக்கூடியது.இச்செடியின் பூக்கள் மஞ்சள் நிறத்தில் அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கும்.இதன் மலர்கள் தங்க சத்து நிறைந்தது.'ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ' என்ற பழமொழியும் இதைப்பற்றி உண்டு.

ஒரு கைப்பிடி அளவு ஆவரம்பூவை எடுத்து, அதில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதை 100 மில்லியாக வற்றவிட்டு, இதனை தினமும் குடித்து வந்தால் சர்க்கரைவியாதி,அடிக்கடி சிறுநீர் கழிப்பது,பாத எரிச்சல்,உடல் வறட்சி,உடலில் உண்டாகும் வேர்வை நாற்றம், உடல் உஷ்ணம் ஆகியவை குணமாகும்.

ஆவரம்பூக்களை பறித்து சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் 1 டீஸ்பூன் பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து ,வடிகட்டி அதனுடன் பால், சர்க்கரை சேர்த்து டீ தயாரித்து தினமும் குடிக்கலாம்.

ஆவரம்பூவை உலர்த்தி பாசிப்பருப்பு அல்லது கடலைப்பருப்பு சேர்த்து அரைத்து சருமத்தில் பூசி குளித்து வந்தால்,தோல் நோய்கள் விலகும்,உடல் பொன்னிறம் பெரும்.

ஆவரம்பூவை பாசிப்பருப்பு ,துவரம்பருப்புடன் சேர்த்து கூட்ட…

பெண்

பெண்னே!             அன்பின் அன்னை  நீ!
            ஆன்மீகத்தின் ஆண்டவன் நீ!
            அரசியலின் அரசி நீ!
            அறிவியலின் ஆதவன் நீ!
            இசையின் இன்பம் நீ!
            இலக்கியத்தின் இலக்கணம் நீ!                
            உலகத்திஉன்னதம் நீ!
             உலகஒற்றுமையின் உருவம் நீ!        
             சமுதாயத்தின் சாவி நீ!
             சாதனைகளின் சாத்தியம் நீ!
             சேவையின் சிகரம் நீ!
             முன்னேற்றதின் முன்னோடி நீ!
             குடும்பத்தின் குத்துவிளக்கு நீ!
              கல்வித்துறையின் கலைமகள் நீ!
              கலைதுறையின் கலங்கரைவிளக்கம் நீ!
              காவல்துறையின் கல்தூண் நீ!
              மருத்துவத்துறையின் மர்மம் நீ!
              விளையாட்டுத்துறையின் விண்மீன் நீ!
              நீதித்துறையின் நீதி நீ!
              தொடக்கம் நீ! முடிவும் நீ!
               நீ இல்லாது இவ்வுலகம் இல்லை
              அனைத்து பெருமைகளுக்கும் உரியவள் நீ!

சுற்றுசூழல் பாதுகாப்பு

விண்ணளாவும்  தொழிற்சாலைகள்  விடுகின்ற கழிவுக் காற்றால்  ஓசோன் புள்ளி உருவெடுத்து இருப்பதாலே அருக்கன் மண்டலமோ அனல் காற்று தருகிறது  தொழிற்சாலை கழிவு நீரும்  தோல் பதனிடும்கழிவுநீரும்  நதிகளில் கலந்து கடலில் கலப்பதாலே  அழிகிறது கடலினங்கள் கடமை குறைவாலே  குடியிருக்கும் வீதிகளில் குவியல் குவியலாக  குப்பைகளைச் சேர்ப்பதாலே  கொசு இனங்கள் பெருக்கெடுத்து  கொடிய நோய் வளர்கிறது  சமுதாயமே ! சமூக சேவகர்களே ! கழிவு நீரை கால்வாயிட்டு வெளியேற்றி  குப்பையை அகற்றி கொடிய கிருமிகளை வெளியேற்றி  கொசுக்களை விரட்டி குடிநீரைப் பேணிக் காத்து  வீதிகள் தோறும் சுற்றுச்சூழல் முகாமிட்டு  மாசுபடாதிருக்க மரங்கள் வளர்த்து  சுகாதாரம் பேணிக் காப்போம்  சுற்றுச்சூழல் பாதுகாப்போம்.

கவிஞர்களின் பார்வையில் ஆசிரியர்கள்

ஏதும் அறியா பருவத்தில் என் கைவிரல் பிடித்து 
என்னை எழுத்தரிவித்தவர்கள் உள்ளதை திருத்தி 
வித்தக ஞானத்தோடு கற்றவர் முன் திகழ 
ஏணிப்படியாய் நின்று என்னை ஏற்றிவிட்டவர்கள் 
என் இதயத்தில் குடியிருக்கும் ஆசான்களே 

மானிடப் பிறவி மடிந்திடா உயிர்வாழ மூளையில் முளைத்த 
மகத்தான சிந்தைகளால் மருத்துவ ஞானங்களை 
மனிதனுக்கு ஊட்டி மங்க புகழ் பெற்ற 
மாமக்கள் ஆசான்களே 

அணு, அனல், நீர் மின்சார கண்டுபிடிப்பு கற்றோரின் 
துணையால் தானே கண்ணனுக்கு எட்டாத மண்ணில் 
மறைந்திருக்கும் எண்ணெய் கனிமங்களை 
விண்கோள் உதவியுடன் விவரங்கள் தருவதெல்லாம் 
கற்றதின் துணையால் தானே 

மண்ணுலக ஊர்தியுடன் விண்ணூர்தி படைத்தலும் 
ஆரியபாட்டாவும், ஆப்பிள் விண்கோளும் ஆகாயத்தில் 
நீந்துவதும் அறிந்த அறிஞனின் ஆற்றல் தானே 
தேங்கி கிடக்கின்ற மேல்நாட்டுக் கல்விகளை 

நோகப் பருகி வந்து தெள்ளமுதாய் உயிரூட்டி
திசை எட்டும் பரப்புவதும் ஆசிரியர் பணி அன்றோ 
கடல் போன்ற கல்விகளை கலர் ஏதும் பாராமல் 
கல்விக் கட்டணங்கள் இல்லாமல் கல்வி தர முன்வந்தால் 

கல்லாதான் இங்கு இல்லாத நாடாகும் 
கரம் சிரம் தூக்கி நடை போடும் கலை மகள் அருளாலே        

ஆரோக்கிய சமையல் குறிப்பு - பாகற்காய் பொடி

Image
பாகற்காய் பொடிதேவையான பொருட்கள்:
    பாகற்காய் வத்தல் -100கிராம்ஸ்     மிளகாய் வத்தல் -12    உளுந்தம் பருப்பு -2tspoon    பெருங்காயம் -சிறிதளவு      புளி -சிறிதளவு      உப்பு -தேவையான அளவு      எண்ணெய்-1tspoon

செய்முறை:        பாகற்காய் வத்தல் ,மிளகாய் வத்தல் ,உளுந்தம்பருப்பு ,புளி ஆகியவற்றை வானெலியில் இட்டு நன்றாக வறுத்துக்கொள்ளவும் .இவை ஆறியஉடன் அதனுடன் பெருங்காயம் ,உப்பு சேர்த்து மிச்சியில்  போட்டு பொடி செய்யவும் .இந்த பொடியை இட்லி ,தோசை ,சுடுசாதம் ஆகியவற்றிக்கு சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடலாம்.

பயன்கள்:இப்பொடி வயிற்றுப்புளுக்களை போக்கும் .இரத்தத்தில் உள்ள அதிக அளவு சர்க்கரையை குறைக்கும் .சர்க்கரைவியாதி  உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. 

இயற்கை

வானமும் நீயே! வானத்தின் வனப்பும் நீயே!
வனத்தில் ஒளிரும் நிலவும் நீயே! விண்மீனும் நீயே!
வைகறைப் பொழுதும் நீயே! வானவில்லும் நீயே!
அடர்ந்த காடும் நீயே! அருவியாய் விழுகின்ற அழகும் நீயே!
மலையும் நீயே! மலையை தழுவுகின்ற முகிலும் நீயே!
வண்ண மலர்களின் வாசம் நீயே! வண்டுகளின் ரீங்காரம் நீயே!
நதியும் நீயே! கடலும் நீயே!
காரிரும் நீயே! கார்முகிலும் நீயே!
மண்ணும் நீயே! மழையும் நீயே!
மழையால் வளரும் மரமும் நீயே! மரம் தரும் கனியும் நீயே!
எங்கும் நிறைந்த காற்றும் நீயே! எல்லா உயிர்களின் இயக்கமும் நீயே!
இரவும் நீயே! பகலும் நீயே!
இருளும் நீயே! ஒளியும் நீயே!
இவ்வுயிர்கள் அனைத்தும் நீயே! நீயே!

YOGASANAS AND MUDRAS FOR DIABETES

Image
In ancient days  saints and sages lead a long and healthy life because as they practised yogasanas and mudras. By doing yogasanas, we will have a healthy and long life . Mudras are  very simple exercises that are done by action with fingers .There are certain  yogasanas and mudras for controlling diabetes.    
DHANURASANA : 1.Lie on the yoga mat facing downwards. 2.Hold the ankles with two hands by bending the legs backwards as shown in the  figure. 3.The body will look like a bow. when you bend the body you should inhale.Bend the body by resting on the abdomen with the spine arched. 4.This pose is to be maintained for few seconds  5.Return to the starting position by exhaling the air  6.Repeat this for 5-6 times.
This asana will enhance the function of pancreas and also it stimulates the beta cells to secrete optimum amount of insulin.


BHUJANGASANA:Lay down on a yoga mat facing downwards.Bring both of your hands to the either side of your chest.With the support of your hands,…

நாட்டிய அரங்கம்

வெண்மேகமே! நீ அம்புலி நடனமாடும் நாட்டிய அரங்கோ ! தூது செல்லும் அன்னபப் பறவைகளின் கூட்டமோ  வானத்து தேவர்களின் பஞ்சு மெத்தையோ ! கார்மேகமே நீ! ஆயிரம் யானைகளின் கூட்டமோ  கடும்காடு சூழ்ந்திருக்கும் காரிருளோ ! நீ மழை என்னும் அமுதத்தை பொழியும் அமுதசுரபியோ ! மின்னலே! நீ வானில் ஒரு ஒளியோ  மேகங்களின் இடைவெளியோ ! போர்களத்திலே அர்ஜுனன் விட்ட அம்போ  இடியே! நீ மேகம் மீட்டும் இசையோ ! நீ வானில் வரும் கான ஒலியோ ! அம்புலியே நீ! ஆகாயக்குளத்திலே  அழகாய்ப் பூத்த அல்லியோ ! நீ சோழ மன்னனின் வெண்கொற்ற குடையோ! இருள் நீக்கும் ஒளியோ இரவுக்கு கிடைத்தப் பரிசோ!   

NATURAL FOOD STUFFS FOR CONTROLLING DIABETES

Image
NATURAL FOOD STUFFS FOR CONTROLLING DIABETES.


Bittergourd,kovakkai,sundakkai,fenugreek seeds,fenugreek leaves,drumstick leaves,curry leaves,beans,cluster beans,peas,bengal gram,cucumber,onion,garlic,olive oil,lady's finger,jamun(naval fruit),kiwi fruit, passion fruit.These above said food stuffs are very useful for controlling diabetes.These food stuffs are having more dietary fiber in then so it will stimulate the pancreas to secreat more insulin.  

REMEDIES FOR KIDNEY STONES

Image
NATURAL REMEDY FOR KIDNEY STONE.
      Mix 150ML of plantain(banana) stem juice with same amount of  tender coconut in it .Take this mixture in the empty stomach for 10-15 days and this will help to remove the kidney stone.This is the best natural method for treatintg the kidney stone and also this prevents the further formation of kidney stones .There are no side effects for this natural medicine.    
HOMEOPATHIC REMEDY FOR KIDNEY STONE     Medicine                   : Lycopodium 30 & Sarsaparilla 30     Dosage                      : 3-4 pills/per day                                          Lycopodium : in Morning ; Before Food                                         Sarsaparilla   : in Night ; Before Food     Duration                    : 10-15 days     The mentioned medicines are available at homeopathy medical shops.     These medicines will remove the kidney stones.
ACCUPRESSURE REMEDY FOR KIDNEY STONE
      Points to pressed : UB60, UB63, UB40, K1, K3, K5     Pressing Procedu…