மருத்துவ குணம் நிறைந்த மகத்தான பழம்(passion fruit)

Inline image 1
Inline image 2    
பேசன் பழம் 
நம் நாட்டில் ஊட்டி,கொடைக்கானல்,பண்ணைக்காடு,குன்னூர் ஆகிய மலை பிரதேசங்களில் கிடைக்ககூடிய பேசன்(passion) பழம் மிகவும் அற்புதமான மருத்துவகுணம் கொண்ட பழம்ஆகும்.இப்பழம் கொடி வகையைச் சேர்ந்தது.15 முதல் 20 அடி வரை வளரக்கூடியது .இதன் வாழ்நாள் 5முதல் 7 வருடங்கள் ஆகும் .  இந்த பழங்களில் மஞ்சள் ,வயலெட் ஆகிய இரண்டு நிறங்கள் உண்டு .இப்பழம் உருண்டை வடிவத்தில் இருந்து ஓவல் வடிவத்தில் இருக்கும் .இதன் தோல் மெழுகு தடவியது போல் பிளாஸ்டிக் மாதரி இருக்கும் .இப்பழத்தின் உள்ளே கருப்பு நிற சின்ன சின்ன விதைகளும் ஜெல்லி மாதரி பகுதியும் இருக்கும் .இப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாகஇருப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை .இரத்த கொழுப்பு ஆகியவற்றை குறைக்கும்.சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு  பழத்தை சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.ஒரு பழத்தில் 348 மில்லிகிராம் பொட்டாசியம் சத்து இருப்பதால் அதிக இரத்தஅழுத்தத்தை குறைக்கும்.இருதய துடிப்பை சீறாக்கும் வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.இப்பழத்தில் மேலும் வைட்டமின் A,வைட்டமின் C, B COMPLEX,பொட்டாசியம்,கால்சியம்,மெக்னீஸியம்,பீட்டா கரோட்டின் ஆகிய சதுக்கள் நிறைந்து உள்ளன்.`இப்பழத்தை உண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி தொற்று நோய்கள் வராமல் தடுக்கும் .இத்தகைய மருத்துவகுணம் நிறைந்த இப் பழத்தை நாம் உண்டால் இரத்த சர்க்கரை ,இரத்த கொழுப்பு ,இரத்த அழுத்தம் ஆகியவை கட்டுப்பாட்டில் இருக்கும் . 

Popular posts from this blog

HEALTH BENEFITS OF PAVALAMALLI (NYCTANTHES ARBOR-TRISTIS )

HOMEOPATHIC REMEDY FOR MENSTRUAL PROBLEMS

SYZYGUIM JAMBOLANUM ( HOMEOPATHIC MEDICINE )