சிரிப்பு ! ஆஹா !! சிரிப்பு !!!

 சிரிப்பு மனிதனுக்கு கடவுள் கொடுத்த ஒரு மிகச்சிறந்த வரம் ஆகும் .நாம் வாய்விட்டு சிரிக்க வேண்டும் .நாம் வாய்விட்டு சிரித்தல் நோய் நம்மை விட்டு போய்விடும் .மனம்விட்டு சிரித்தல் மனத்தில் மகிழ்ச்சி பொங்கும் .குலுங்க குலுங்க சிரிப்பது ஒரு சிறந்த அகஉடல் பயிற்சி ஆகும் .நம் அகஉறுப்புக்கள் எல்லாம் புத்துணர்ச்சி பெற்று அதனின் இயக்கம் சீராக இருக்கும் .கைகொட்டி சிரிப்பது ஒரு மாமருந்து .நாம் கை கொட்டி சிரிப்பதால் நமது கைகளில் உள்ள உறுப்புக்களின் அடையாள அக்குபிரசர் புள்ளிகள் தூண்டப்பட்டு நம் உடலில் உள்ள நோய் குணமாகும் .உடல் புத்துணர்ச்சி பெரும் .
                    சிரிக்க சிரிக்க பேசினால் நம் கவலைகள் எல்லாம் பறந்தோடிவிடும் .மனதில் இன்பம் பெருகும் .மனஅழுத்தத்திற்கு மாமருந்து சிரிப்பு .துன்பம் வரும் பொழுது சிரிக்க வேண்டும் .அத்துன்பம் விலக அதுவே சிறந்த வழியாகும் .மகிழ்ச்சியுடன் இருப்போர்க்கு இல்லை மாரடைப்பு .சிரிக்க சிரிக்க பேசினால் பிறர் மகிழ்வர் ,வாய்விட்டு சிரித்தல் நுரையீரலுக்கு பிராணவாயு கிடைக்கும் ,அறுசுவை உணவுக்கு அடுத்து எழாவதுசுவை நகைச்சுவை .நாம் நகைசுவையை கேட்கும்போதெல்லாம் வாய்விட்டு சிரிக்க வேண்டும் நாம் வாய்விட்டு சிரிப்பதால் நம் உடலில் உள்ள செல்கள் எல்லாம் புத்துணர்ச்சி பெரும் .நம் வாழ் நாளை அதிகரிக்கும்.நாம் தினமும் வாய்விட்டு சிரித்தால் மனமகிழ்ச்சியுடனும் ,ஆரோக்கியமாகவும் நீண்ட காலம் வாழலாம் .

சிரிப்பு ! ஆஹா !! சிரிப்பு !!!

Popular posts from this blog

HEALTH BENEFITS OF PAVALAMALLI (NYCTANTHES ARBOR-TRISTIS )

HOMEOPATHIC REMEDY FOR MENSTRUAL PROBLEMS

SYZYGUIM JAMBOLANUM ( HOMEOPATHIC MEDICINE )