சர்க்கரையை கட்டுபாட்டில் வைக்கலாமே !

  (குறிப்பு: என்னுடைய இக்கட்டுரை ஜூன் மாதம் "சினேகிதி" மாதஇதழில் வெளிவந்துள்ளது)  
                    
                  ஆலிவ்எண்ணெய்,கோவைக்காய் ,பாகற்க்காய் ,வெண்டைக்காய் ,பீன்ஸ் ,சீனிஅவரைக்காய் ,அவரைக்காய் ,முருங்கக்காய் ,முருங்கக்கீரை ,கொத்தமல்லிக்கீரை ,பொதினா ,கருவேப்பிலை ,தண்டுக்கீரை ,வெந்தயக்கீரை ,வெங்காயம் , பூண்டு ,வெள்ளரிக்காய் ,வெந்தயம் ,கொண்டக்கடலை ,பட்டாணி .கோதுமை ,முளைவிட்ட பருப்பு வகைகள் ,நாவல்பழம் ,கொய்யாக்காய் ,கிவிப்பழம் ,பேசன்பழம் ,மஞ்சள் ,பட்டை,நெல்லிக்காய்  ஆகிய உணவு வகைகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக்குறைத்து சர்க்கரைநோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் .எனவே சர்கரைநோயளிகள் தினமும் இந்த உணவுவகைகளை சேர்த்துக்கொள்ளவேண்டும் .இந்த உணவு வகைகளில் அதிகளவு நார்சத்து ,மற்றும் அனைத்து வகையான சத்துக்களும் நிறைந்துள்ளன ,இது இரத்தத்தில் உள்ள கொழுப்புசத்தைக்குறைக்கும்   .                                        
                  
                  சர்க்கரைநோயாளிகள் ஒரு நேரத்தில் உண்ணவேண்டிய உணவை மொத்தமாக ஒரே தடவையில் உண்ணாமல் பிரித்து உண்ணவேண்டும் ,ஒரே நேரத்தில் உண்டால் உணவு செரிமானமாகி இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும் . 
                                                  
                   சர்க்கரைநோயாளிகள் தினமும் 20 நிமிடம் நடைபயிற்சி, சைக்கிளிங்ஆகியவற்றையும்,5 நிமிடம் மூச்சிப்பயிற்சியும்,
கீழே குறிபிட்டுஉள்ள சில ஆசனங்களையும்,சில அக்குப்புள்ளிகளை அழுத்திவிடுதல் ஆகியவரற்றையும் செய்தால் சர்கரைநோய் கட்டுபாட்டில் 
இருக்கும் .
SP-6
Inline image 4Inline image 2
             Inline image 3                   Inline image 6
SP-6
     இப்புள்ளி உள்பக்கக்கணுக்காலில் இருந்து 4விரல் தூரம் மேலே உள்ளது[ இப்புள்ளிகள்அனைத்தையும்  [16-21] தடவை கை பெருவிரல் கொண்டு அழுத்தம் கொடுக்க வேண்டும்].
ST-36
      இப்புள்ளி வெளிப்பக்க முழங்கால் மேல் பள்ளத்தில் இருந்து நேராக கீழே 4 விரல் தூரம்  உள்ளது .
K-3
  இப்புள்ளி உள்ப்பக்க கணுக்காலின் மேல் முனைக்கு பக்கவாட்டில் ஒரு பெருவிரல் தூரம் உள்ளது .                                                                                   TW-5                                                                                                                     Iஇப்புள்ளி வெளிப்பக்க கையின் மணிக்கட்டு ரேகையிலமத்தியில்  இருந்து 3 விரல் தூரத்தில்  உள்ளது ,

                                                             Inline image 8
                                                                              தனுராசனம்                                                        
 
     முதலில் குப்புற படுத்து கைகளை தொடையுடன் சேர்த்து வைத்துக்கொள்ளவேண்டும் .பிறகு கால்களை மடித்து கைகளா ல் கணு க்கால்களைப் பிடிக்கவும் .தலையையும் ,கழுத்தையும் மேலே தூக்கி வளைத்து மூச்சை உள் இழுத்தவாறு படத்தில் காட்டியபடி  செய்யவும் .6-8செக்கண்டுகள் இந்நிலையில் இருந்துவிட்டு மூச்சை விட்டுக்கொண்டே பழைய நிலைக்கு திரும்பவும் .இதேபோல் 6 தடவை செய்யவும் இந்த ஆசனம் செய்வதால் கணயசுரப்பி  தூண்டப்பட்டு இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும் .இது நீரழிவு நோயை குணப்படுத்தும் .                         .            
                   மேற்கண்ட உணவுவகைகளையும் அக்குப்புள்ளிகளையும் ,இந்த ஆசனத்தையும் ,நடைபயிற்சி,மூச்சிபயிற்சி ஆகியவைகளை செய்து வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் இருக்கும் .உடல் உறுப்புக்கள் பாதிப்பு இல்லாமல் நீண்டநாள் சந்தோசமாக வாழலாம் .                                    

 வாழ்கவளமுடன்.
                         

Popular posts from this blog

HEALTH BENEFITS OF PAVALAMALLI (NYCTANTHES ARBOR-TRISTIS )

HOMEOPATHIC REMEDY FOR MENSTRUAL PROBLEMS

SYZYGUIM JAMBOLANUM ( HOMEOPATHIC MEDICINE )