அறுசுவை உணவு
ஆறு சுவைகளான காரம்,புளிப்பு,இனிப்பு,துவர்ப்பு,உவர்ப்பு,கசப்பு அனைத்தும் நம் உடலுக்கு தேவையானது. நாம் அறுசுவை உணவை உட்கொண்டால் நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும்.நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் ஒரு சுவையைக் கொண்டது.
கல்லீரல் மற்றும் கால் பிளாடர் புளிப்பு சுவை கொண்டது.
இருதயம் மற்றும் கணையம் கசப்பு சுவை கொண்டது.
மண்ணீரல் மற்றும் இரைப்பை இனிப்பு சுவை கொண்டது.
நுரையீரல் மற்றும் பெருங்குடல் காரச் சுவை கொண்டது.
சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை உவர்ப்பு சுவை கொண்டது.
இச்சுவைகள் அதிகமாகும் பொழுது அந்தந்த உறுப்புக்களை பாதிக்கிறது. அநேக மக்களுக்கு பிடித்த சுவை காரச் சுவையாகும். இதனை அதிகமாக உட்கொண்டால் அல்சர்,நரம்பு தளர்ச்சி,சிறுநீர் கழிக்கும் பொது எரிச்சல்,உடலில் சிறுசிறு கொப்பளங்கள்,வயிற்றுவலி போன்றவைகள் உண்டாகும்.மிளகாய்,மிளகு,கடுகு போன்றவைகளில் காரச் சுவை அதிகமாக உள்ளது.
ஒரு பொருளை சுத்தம் செய்யகூடிய தன்மை புளிப்பு சுவைக்கு உண்டு. புளிப்பு அமிலத் தன்மை வாய்ந்தது.ரத்தத்தில் உள்ள பித்தத்தை குறைக்கும். புளி,எலுமிச்சை,மாங்காய் ஆகியவற்றில் புளிப்பு சுவை அதிகம் உண்டு.
இனிப்பு சுவை உடலை வளர்க்கும்,எடையை கூட்டும். உணர்ச்சிகளை கட்டுபடுத்தும். கோபத்தை தணிக்கும். தசைப்பாகங்கள் அதிகமாக வளரும்.சர்க்கரை,வெல்லம் ,கரும்பு,சில பழ வகைகள் ஆகியவற்றில் இனிப்பு சுவை இருக்கும்.
துவர்ப்புச்சுவை இரத்தத்தை உறையவைக்கும் பைப்ரினோஜன் என்னும் ஒரு வித புரோட்டீன் சக்தியை அளிக்கிறது . பருப்புவகைகள்,நுங்கின் மேற்தோல் ,நாவல்பழம்,சோம்பு போன்ற உணவு வகைகளில் துவர்ப்புச்சுவை அதிகமாக உள்ளது .புண்களை ஆற்றும் சக்தி துவர்ப்புசுவைக்கு உண்டு .
உவர்ப்புச் சுவை நினைவாற்றலை அதிகரிக்கும். பிற பொருட்களின் தாக்குதலால் உடல் அழியா வண்ணம் காக்கும் சக்தி உவர்ப்புச் சுவைக்கு உண்டு. இச்சுவை அதிகரித்தால் கைகால் வீக்கம்,முக வீக்கம்,தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள்,ரத்த அழுத்தம்,சிறுநீரக வியாதிகள்,உடல் எடைகூடுதல் ஆகியவை வரும்.
கசப்பு சுவை உடலின் அணைத்து பாகங்களும் உறுதி அடைய பயன்படும்.மேலும் தேய்மானப் பகுதிகளை புதுப்பிக்கும் ஆற்றல் கசப்பு சுவைக்கு உண்டு.உடலில் நுழையும் நுண்கிருமிகளை அழித்து உடலை பாதுகாக்கும்.எலும்பு,தசைகள்,நரம்புகள் ஆகியவற்றை உறுதி அடையச் செய்யும்.பாகற்காய்,சுண்டைக்காய்,வேம்பு ஆகியவற்றில் கசப்பு சுவை அதிகமாக உள்ளது.
இந்த ஆறு சுவைகளையும் கலந்த உணவை நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.அவ்வாறு சேர்த்துக் கொண்டால் அந்தந்த உறுப்புகளுக்கு தேவையான சத்துக்கள் கிடக்கப்பெற்று உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் நன்றாக இயங்கும்.நோய் நம்மை அணுகாது, நீண்ட நாள் சந்தோசமாக வாழலாம்.
Comments
Post a Comment