ஆரோக்கிய சமையல் குறிப்பு-வல்லாரை சாலட்
வல்லாரை சாலட்
தேவையான பொருட்கள் :
வல்லாரைக்கீரை - 1கட்டு
தேங்காய்த்துருவல் -3மேஜைக்கரண்டி
பெரியவெங்காயம் -1
பச்சைமிளகாய் -3
எலுமிச்சம்பழம் -பாதி
மிளகுத்தூள் -கால் தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
செய்முறை :
வல்லாரைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து ,கழுவி பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும் .வெங்காயம் ,பச்சைமிளகாய் ஆகியவற்றை நறுக்கி வல்லரைக்கீரையுடன் சேர்த்து ,அதனுடன் தேங்காய்த்துருவல் ,மிளகுத்தூள் ,உப்பு சேர்த்து எலுமிச்சம்பழம் பிழிந்து நன்றாகக் கலக்கவும். இப்பொழுது அருமையான அதிக சத்துக்கள் நிறைந்த வல்லாரை சாலட் தயார்.
பயன்கள்:
- ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
- மூளைக்கும் நரம்புகளுக்கும் வலுவூட்ட கூடியது.
- இந்த சாலட்டை வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் ஞாபக சக்தி அதிகரித்து நன்றாக படிப்பார்கள்.
வல்லாரைக்கீரை |
தேங்காய்த்துருவல் |
மிளகுத்தூள் |
எலுமிச்சம்பழம் |
Comments
Post a Comment