கவிஞர்களின் பார்வையில் ஆசிரியர்கள்
ஏதும் அறியா பருவத்தில் என் கைவிரல் பிடித்து
என்னை எழுத்தரிவித்தவர்கள் உள்ளதை திருத்தி
வித்தக ஞானத்தோடு கற்றவர் முன் திகழ
ஏணிப்படியாய் நின்று என்னை ஏற்றிவிட்டவர்கள்
என் இதயத்தில் குடியிருக்கும் ஆசான்களே
மானிடப் பிறவி மடிந்திடா உயிர்வாழ மூளையில் முளைத்த
மகத்தான சிந்தைகளால் மருத்துவ ஞானங்களை
மனிதனுக்கு ஊட்டி மங்க புகழ் பெற்ற
மாமக்கள் ஆசான்களே
அணு, அனல், நீர் மின்சார கண்டுபிடிப்பு கற்றோரின்
துணையால் தானே கண்ணனுக்கு எட்டாத மண்ணில்
மறைந்திருக்கும் எண்ணெய் கனிமங்களை
விண்கோள் உதவியுடன் விவரங்கள் தருவதெல்லாம்
கற்றதின் துணையால் தானே
மண்ணுலக ஊர்தியுடன் விண்ணூர்தி படைத்தலும்
ஆரியபாட்டாவும், ஆப்பிள் விண்கோளும் ஆகாயத்தில்
நீந்துவதும் அறிந்த அறிஞனின் ஆற்றல் தானே
தேங்கி கிடக்கின்ற மேல்நாட்டுக் கல்விகளை
நோகப் பருகி வந்து தெள்ளமுதாய் உயிரூட்டி
திசை எட்டும் பரப்புவதும் ஆசிரியர் பணி அன்றோ
கடல் போன்ற கல்விகளை கலர் ஏதும் பாராமல்
கல்விக் கட்டணங்கள் இல்லாமல் கல்வி தர முன்வந்தால்
கல்லாதான் இங்கு இல்லாத நாடாகும்
கரம் சிரம் தூக்கி நடை போடும் கலை மகள் அருளாலே
Comments
Post a Comment