வானம்போல் உதவுவோம்

முடிவில்லா முயற்சி செய்தால்
முடியாததது எதுவுமில்லை மானிடரே!
உலகிற்கே உதவும் திறன் இருக்க
உற்றார் உதவி உனக்கெதற்கு
கடல் அலை என்றும் ஓய்ந்ததில்லை
காற்றலை கூட சாய்ந்ததில்லை
தோல்வியை ஏற்கும் மனமிருந்தால் ,உனை
வெற்றி நோக்கிப் பயணமிடும்
மனிதநேய மனமிருந்தால்
புனிதம் அதைவிட வேறில்லை
பிறப்பென்று இருக்கும் மாந்தர்க்கு
இறப்பதைத் தடைபோட விதியுமில்லை
இறப்பினும் வாழலாம் மாந்தர்களே
இருப்போர்க்குக் கொடுங்கள் கண்தானம் .

Comments

Popular posts from this blog

HEALTH BENEFITS OF BANANA FLOWER

HEALTH BENEFITS OF PAVALAMALLI (NYCTANTHES ARBOR-TRISTIS)

WORLD HEART DAY

HEALTH BENEFITS OF PONNAVARAI

PATHANEER OR NEERA HEALTH BENEFITS