வெள்ளரிக்காய் ,காரட் இவைகளை எடுத்து நன்றாகக்கழுவி மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்து வடிகட்டி அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அருந்தினால் இந்த ஜூஸ் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் பலவித நோய்களை போக்கவல்லது.வெள்ளரிக்காயில் பொட்டாசியம் ,கால்சியம்,செலினியம்வைட்டமின் -எ ,வைட்டமின் பீகாம்பிளக்ஸ் ,வைட்டமின் சி ,,நார்சத்து ,போன்ற சத்துக்கள்அதிகம் உள்ளன ,தோல்வறட்சி இரத்தஅழுத்தம் ,சர்க்கரைவியாதி ,சிறுநீரக வியாதி ,போன்ற நோய்களுக்கு மிகவும் உகந்தது .வெள்ளரிக்காயிலும் காரட்டைப் போலவே தோலுக்கு அருகில் சத்துக்கள் உள்ளதால் தோலை சீவாமல் அப்படியே பயன் படுத்த வேண்டும் .வெள்ளரிக்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது .உடல் பளபளப்பு பெரும் .
.
.jpg) |
காரட் |
 |
வெள்ளரிக்காய் |
Comments
Post a Comment