ஆவரம்பூவின் மருத்துவ பயன்கள்
ஆவாரம்பூ செடி வறட்சியை தாங்கி வளரக்கூடிய ஒரு செடி இனம் ஆகும்.இது எந்த வகையான நிலமாக இருந்தாலும் குத்துச் செடியாக வளரக்கூடியது.இச்செடியின் பூக்கள் மஞ்சள் நிறத்தில் அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கும்.இதன் மலர்கள் தங்க சத்து நிறைந்தது.'ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ' என்ற பழமொழியும் இதைப்பற்றி உண்டு.
ஒரு கைப்பிடி அளவு ஆவரம்பூவை எடுத்து, அதில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதை 100 மில்லியாக வற்றவிட்டு, இதனை தினமும் குடித்து வந்தால் சர்க்கரைவியாதி,அடிக்கடி சிறுநீர் கழிப்பது,பாத எரிச்சல்,உடல் வறட்சி,உடலில் உண்டாகும் வேர்வை நாற்றம், உடல் உஷ்ணம் ஆகியவை குணமாகும்.
ஆவரம்பூக்களை பறித்து சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் 1 டீஸ்பூன் பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து ,வடிகட்டி அதனுடன் பால், சர்க்கரை சேர்த்து டீ தயாரித்து தினமும் குடிக்கலாம்.
ஆவரம்பூவை உலர்த்தி பாசிப்பருப்பு அல்லது கடலைப்பருப்பு சேர்த்து அரைத்து சருமத்தில் பூசி குளித்து வந்தால்,தோல் நோய்கள் விலகும்,உடல் பொன்னிறம் பெரும்.
ஆவரம்பூவை பாசிப்பருப்பு ,துவரம்பருப்புடன் சேர்த்து கூட்டாக செய்து சாப்பிடலாம்.
ஆவாரம்பூ செடி |
Comments
Post a Comment