சுற்றுசூழல் பாதுகாப்பு


விண்ணளாவும்  தொழிற்சாலைகள் 
விடுகின்ற கழிவுக் காற்றால் 
ஓசோன் புள்ளி உருவெடுத்து இருப்பதாலே
அருக்கன் மண்டலமோ அனல் காற்று தருகிறது 
தொழிற்சாலை கழிவு நீரும் 
தோல் பதனிடும்கழிவுநீரும் 
நதிகளில் கலந்து கடலில் கலப்பதாலே 
அழிகிறது கடலினங்கள் கடமை குறைவாலே 
குடியிருக்கும் வீதிகளில் குவியல் குவியலாக 
குப்பைகளைச் சேர்ப்பதாலே 
கொசு இனங்கள் பெருக்கெடுத்து 
கொடிய நோய் வளர்கிறது 
சமுதாயமே ! சமூக சேவகர்களே !
கழிவு நீரை கால்வாயிட்டு வெளியேற்றி 
குப்பையை அகற்றி கொடிய கிருமிகளை வெளியேற்றி 
கொசுக்களை விரட்டி குடிநீரைப் பேணிக் காத்து 
வீதிகள் தோறும் சுற்றுச்சூழல் முகாமிட்டு 
மாசுபடாதிருக்க மரங்கள் வளர்த்து 
சுகாதாரம் பேணிக் காப்போம்  சுற்றுச்சூழல் பாதுகாப்போம்.     

Comments

Popular posts from this blog

HEALTH BENEFITS OF PAVALAMALLI (NYCTANTHES ARBOR-TRISTIS)

HEALTH BENEFITS OF BANANA FLOWER

HEALTH BENEFITS OF PONNAVARAI

MEDICINAL BENEFITS OF MIMUSOPS ELENGI (MAGILA MARAM)

HEALTH BENEFITS OF PUNARNAVA ( BOERHAVIA DIFFUSA )