வெயிலுக்கு பயந்து உள்ளே போகாதீங்க !
(குறிப்பு:நான் எழுதிய இந்த கட்டுரை மே மாதம் 'சினேகிதி' மாத இதழில் வெளிவந்துள்ளது )
அதிக சூரிய ஒளி கிடைகக்கூடிய நம்நாட்டில் சூரியஒளி மூலம் ஆற்றல் தயாரித்து அதன்முலம் மினவிளக்குகள்,இயந்திரங்கள் ,இரண்டு,நான்கு சக்கரவாகனங்கள் மற்றும் பல உபகரணங்கள் ஆகியவற்றை நாம் இயக்கிக்கொண்டுளோம்.ஆனால் சூரியஒளியில் இருந்து மனிதனுக்குக் கிடைக்கக்கூடிய முக்கிய சத்தான வைட்டமின்-D குறைபாட்டினால் பலர் அவதிபடுகிறார்கள் .குறிப்பாக பெண்கள் நாற்பது
வெயிலில் சென்றால் கருத்துவிடுவோம் ,மயக்கம்வரும் என்று கருதி வெயிலில் செல்வதை தவிர்கிறாகள்.வெய்லில் நீண்டநேரம் இருந்தால்தான் இந்தமாதரியான பிரச்னைகள் வரும்.நாம் அந்தநேரத்தில் கடைகளுக்குச்செல்வது,பக்கத்தில் இருக்கும் கோவிலுக்குச்செல்வது,துணிகளைது வைத்துகாயவைப்பது,வீட்டு சாமான்களை காயவைப்பது போன்ற வேலைகளை செய்யலாம்.வைட்டமின் -D அதிகம் இருக்ககூடிய உணவுவகைகளான மீன்,பால்,முட்டை,வெண்ணெய்,நெய் ஆகியவற்றை உணவில்சேர்த்துக்கொள்ளவேண்டும். 40 வயதுக்கு மேல் குறிப்பாக பெண்கள் மருத்துவரிடம் சென்று வைட்டமின் -D பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.வைட்டமின் -D குறைவாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின் -D மாத்திரைகள் எடுத்துக் கொள்ளவேண்டும் அவ்வாறு எடுத்துக்கொண்டால் எலும்பு பதிப்புகள் இல்லாமல் நாம் உடல்நலத்துடன் இனிமையாக வாழலாம்.
வயதிற்குமேல்தான் இக்குறைபாட்டால் பாதிக்கபடுகிறார்கள் .குறிப்பாக அலுவலகம் செல்லும் பெண்கள் ,வீட்டிலேயே இருந்து வீட்டுவேலைசெய்யும் பெண்கள்,கணினிதுறையில் இருக்கும் பெண்கள் ஆகியோர் மிகவும் பாதிக்கபடுகிறார்கள்.ஏனேன்றால் இவர்கள் வெயிலில் செல்வதற்கே சந்தர்ப்பம் கிடைப்பது இல்லை. .
சூரியஒளி வைட்டமின் என்று அழைக்கப்படும் வைட்டமின் D ஒரு கொழுப்பில் கரையும் வைட்டமின் ஆகும்.நமது உடல் கால்சியம் சத்தை உட்கிரகித்துக் கொள்வதற்கு வைட்டமின்-D மிகவும் அவசியம்.வைட்டமின் -D கால்சிபெரால் என்று அழைக்கபடுகிறது.இந்த வைட்டமின் நமது உடலில் கல்லீரல் போன்ற சுரப்பிகளில் சேமித்து வைக்கப்படுகிறது . இந்த குறைபாடு இருந்தால் நமது உடலில் கால்சியம் உட்கிரகிப்பது குறைந்துவிடும்.நாம் எவ்வளவுதான் நல்ல சத்துள்ள உணவு எடுத்துக்கொண்டாலும் வைட்டமின்-D குறைபாடுஇருந்தால் களைப்பு,தசைகளில்வலி,தசைப்பிடி ப்பு,மூட்டுவலி,கழுத்துவலி,தலை வலி,மலச்சிகல்,அமைதிஇல்லாததூக் கம்,எலும்புசம்பந்தம்மானநோய்கள் ,கிழேவிழுந்துவிட்டால் எலும்புமுறிவு,நரம்புசம்பந்தப் பட்டவியாதிகள்,கண்குறைபாடுகள், எலும்புபுரைசல்நோய்,கால்எலும்பு கள்வளைதல்,மற்றும் உடம்பிலிலுள்ள அனைத்து எலும்புகள்பாதிக்கபடும்.இக்குறை பாட்டால் சிறியவர்கள்முதல் பெரியவர்கள்வரை இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள் .இக்குறைபாட்டினால் குழந்தைகளுக்கு வரும்நோய் ரிக்கட்ஸ் என்றும் ,பெரியவர்களுக்குவரும்நோய் ஆஸ்டியோமலேசியா என்றும் அழைக்கப்படுகிறது .ரிக்கெட்ஸ் நோயினால் குழந்தைகளுக்கு எழும்புவளர்ச்சிஇல்லாமை ,பற்கள்பாதிப்பு ஆகியவை உண்டாகும் .பெரியவர்களுக்கு எலும்புபுரைசல்நோய் உண்டாகும் .சரா சரிமனி தனுக்கு ஒருநாளைக்கு 400 IU முதல் 800 IU வரை வைட்டமின் -D தேவைப்படுகிறது.இதுகிடைபதற்கு நம்மீது சூரியஒளி படவேண்டும்.காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை உள்ள வெயிலில் அதிகஅளவு வைட்டமின் -D கிடைக்கும்.அந்தநேரத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை இருந்தால் அன்றாடம்நமக்குத்தேவையான வைட்டமின்-D கிடைத்துவிடும்.
Comments
Post a Comment