புதுமைப்பெண்

தொன்மை வாதிகளால்
தொடர்ந்த மூடப்பழக்கத்தால்
அடிமையாய் வாழ்ந்த நாட்டில்
அடித்தட்டு மக்களாக
அடுப்பூதும் பெண்ணாக

ஆண் அடிமைக்கு அடிமையாக
ஆண் ஆசைக்குக் கருவியாக
சுற்று சுவருக்குள்ளே
சுதந்திரக் காற்றலையை
சுவாசிக்க முடியாமல்
சோர்வுற்று தவித்தவளே

கணவன் இறந்தவுடன் மனையாள்
கணப்பொழுதும் பாராமல்
கருமகாரியங்கள் செய்யாமல்
காலன் அழைப்பு என்று (தீ )
கட்டைமேல் கட்டை வைத்து
கணவணோடு  அனுப்பியது
கடந்தகால வரலாறு

கருவுற்றுப் பிறந்த பிள்ளை
கல்வி அறிவில்லலா மூடர்களால்
கல்லிப்பாலும் விசஉணவும்
கலந்த கருக்கா நெல்லும்
உணவாகக் கொடுத்து
உயிரைப் பரித்தார்கள் ஏன் ?
பெண் சிசு என்பதாலே

ஒன்பதாம் நூற்றாண்டில்
உயிர்விட்ட சிசுக்கலெல்லாம்
உயிர்த்துக் குதித்தெழுந்து
ஒவொன்றாய் அறிவுபெற
பத்தொன்பதாம் நூற்றாண்டில்
பகுத்தறிவு பாசறைகள்
பாடசாலைக்கு அனுப்பியதால்
பாராள வந்து விட்டோம் -இன்று
பாதி இடம் பிடித்துவிட்டோம்

ஆனால்
வரதட்சணை பெரும் கொடுமை
வயதான பெண் இனமோ
வாழவந்த பெண் இனத்தை
வாட்டி வதைப்பதாலே
வாய்பேசமுடியாத
வலுவற்ற ஆண்கள் எல்லாம்
வாடுகின்றார் சிறையினிலே
வரதட்சணை சட்டத்தாலே

கல்விகற்ற பெண் இனமே
கடல் அலையாய் நம் திரண்டு
கலப்புத் திருமணத்தை
 சுயம் வரத்தில் நாம் எடுத்து 
சுதந்திரமாய் ஆதரிப்போம்
 புதுமைப்பெண்  நாமாக

Comments

Popular posts from this blog

HEALTH BENEFITS OF BANANA FLOWER

WORLD HEART DAY

HEALTH BENEFITS OF PAVALAMALLI (NYCTANTHES ARBOR-TRISTIS)

PATHANEER OR NEERA HEALTH BENEFITS

HEALTH BENEFITS OF PONNAVARAI